Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அட.... தேர்தல் பணப் பட்டுவாடாவில் தமிழகம் இரண்டாமிடமாம். அப்போ முதலிடம்..!?

சென்னை; தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதை யும், ஓட்டுக்கு பணம் தருவதையும் தடுக்க வேண்டு மென தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ், அரசியல்கட்சிகளின் முறைகேடுகளுக்கு தேர்தல் அதிகாரிகளும் துணைபோவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை யில்,  ' தேர்தலில் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம் என்று அதிமுகவும், திமுகவும் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்ற பா.ம.க வின் கோரிக்கையை இரு கட்சிகளும் ஏற்கவில்லை.

அதைவிட கொடுமை பணபலத்தை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணையமும் செவிமடுக்கவில்லை என்பது தான்.  திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தேர்தல் தேதி அறிவிக்கப் படுவதற்கு முன்பே பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொண்டு சென்று மாவட்ட அளவில் பதுக்கி வைத்து விட்டன. ஓட்டுக்கு பணம் தருவதில் தமிழகம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

தேர்தல் நெருக்கத்தில் இந்த பணம் தான் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என்பதால் திடீர் சோதனைகளை நடத்தி அந்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. மாறாக, பண வினியோகத்திற்கு தேர்தல் ஆணையமே துணை நின்றது.

கோவை தெற்கு தொகுதி தேர்தல் அதிகாரி காந்திமதி, தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி மதுராந்தகி ஆகியோர் தங்கள் வாகனத்திலேயே பணம் கொண்டு செல்லப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் அதிகாரிகளே ஆளும்கட்சிக்காக வாகனத்தில் பணத்தை கடத்திச் செல்வது வேலியே பயிரை மேயும் செயலுக்கு இணையான குற்றம் ஆகும். இதற்காக அந்த இரு அதிகாரிகளையும் தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து மட்டுமின்றி அரசு பணியிலிருந்தே நீக்கி, தேர்தல் முறைகேடுகளுக்காக கைது செய்திருக்க வேண்டும்.

ஆனால், வேறு காரணங்களைக் கூறி வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்து விட்டு அவர்களை தேர்தல் அதிகாரி பணியில் நீடிக்கச் செய்வது எந்த வகையில் நியாயம்? ஆளுங்கட்சிக்காக பணத்தை கடத்தி செல்லும் அளவுக்கு துணிந்த அவர்கள் தேர்தலை எப்படி நியாயமாக நடத்துவார்கள்?
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தொகுதிகளில் கொண்டு சென்று பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்ய ஆணையம் தவறி விட்டதால் அந்த பணம் இப்போது உள்ளூர் காவல்துறை ஒத்துழைப்புடன் வினியோகிக்கப்படுகிறது.

இரு கட்சிகளிலுமே சாதாரண வேட்பாளர்களில் தொடங்கி கட்சித் தலைவர்களான ஜெயலலிதா, கலைஞர், மு.க.ஸ்டாலின் வரை போட்டியிடும் 234 தொகுதிகளிலும் பணம் வெள்ளமாக பாய்கிறது. ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஊழலை மட்டுமே செய்த கட்சிகள், இப்போது அதிலிருந்து ஒரு பகுதியை மக்களிடம் வீசி எறிந்து  வாக்குகளை வாங்கத் துடிக்கிறார்கள்.

இந்த அளவு பணத்தை செலவு செய்யும் இரு கட்சிகளும் ஆட்சிக்கு வந்தால் இதைவிட 1000 மடங்கு  சம்பாதிப்பதில் தான் கவனம் செலுத்துவார்கள். மக்களுக்காக எதையும் செய்யமாட்டார்கள். மதுக்கடைகளை மூடுவதோ, தரமான கல்வி, வேலைவாய்ப்பு அளிப்பதோ, மக்களின் குறைகளை களைவதோ சாத்தியமே இல்லை. காவல் நிலையங்களை கட்டப்பஞ்சாயத்து கூடங்களாக மாற்றுவதும், நிலங்களை ஆக்கிரமிப்பதும் தான் நடக்கும். பெண்கள் தெருக்களில் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுவிடும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வாக்குகளைப்பெறுவதற்காக பொதுமக்களுக்கு பணத்தை வாரி வழங்குவதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close