Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தலைப் புறக்கணித்த வாக்காளர்கள்:திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பு!

திருவள்ளூர்: தங்களின் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிட்ட கண்டிகை கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இங்கு மொத்தம் 586 வாக்குகள் உள்ளன.     

கடந்த 20 ஆண்டுகளாக தங்கள் கிராமத்திற்கு குடிநீர், சாலை, பேருந்து உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என மிட்ட கண்டிகை மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகார் அளித்ததாகவும் மிட்டகண்டிகை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாக்களிப்பதற்கு யாரும் வரவில்லை என்பதை அறிந்து, திருத்தணி வட்டாட்சியர் ஆசீர்வாதம் அங்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே, வாக்களிக்கப் போவதாக மிட்டகண்டிகை கிராமத்தினர் அவரிடம் கூறியுள்ளனர்.
 

முறியப்பாஞ்சான் அணைப் பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 3 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

இதேபோல், நாங்குநேரி சட்டமன்றத்திற்கு உட்பட்ட ராஜபுதூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணித்துள்ளனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ