Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலூரில் விடுப்பில் சென்ற வெயில்.. விறுவிறு வாக்குப்பதிவு

வேலுார்; தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கிய நிலையில் வேலுார் மாவட்டத்தில்  பகல் 12.30 மணி நிலவரப்படி 34.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேலுார் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கத்துக்கு மாறாக இன்று காலநிலை குளிர்ச்சியாகவும் சாரல் மழை மற்றும் பல இடங்களில் வானம் மேக மூட்டம் என பலவிதங்களில் பொதுமக்களுக்கு சாதகமாக இருப்பதால் வாக்காளர்கள் சிரமங்களின்றி வாக்களித்து வருகின்றனர்.

வேலுார் மாவட்டத்தில் தொகுதி வாரியாக பகல் 12 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் நிலவரம்
வேலூர் 35%, காட்பாடி 37%, கேவி. குப்பம் 38%, குடியாத்தம். 37%, ஆம்பூர் 26%, வாணியம்பாடி 35%, ஜோலார்பேட்டை 41% , திருப்பத்தூர் 36%, ஆற்காடு 19.82% , ராணிப்பேட்டை 36% , சோளிங்கர் 41%, அரக்கோணம் 35.5%, அணைக்கட்டு 33% என பதிவாகியுள்ளது.

மொத்தமாக வேலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் சதவீதம் 34.64% என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ