Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேட்டுப்பாளையம் தொகுதியில் வாக்களித்த 105 வயது மூதாட்டி!

கோவை : மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 105 வயது மூதாட்டி ஒருவர் வாக்களித்து, தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வாக்காளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. மேட்டுப்பாளையம்  தொகுதியில் உள்ள 312 வாக்குச் சாவடி மையங்களில் 1250 வாக்குப்பதிவு அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் 7 வது வார்டு, கபர்ஸ்தான் அருகில் குடியிருக்கும் 105 வயது மூதாட்டி கச்சாமா என்பவர், தனது தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில் வந்து ஓட்டுப் போட்டார்.

இவரின்  கணவர் உமர் கோயா,  கபரஸ்தானில் குழி வெட்டும் வேலை செய்துவந்தார். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

வாக்களித்தது குறித்து கச்சாமா கூறுகையில், " கேரளா மாநிலம் திருச்சூர் சொந்த ஊர். 15 வயதில் திருமணம். இரண்டு குழந்தைகளுடன் 17 வயதில் மேட்டுப்பாளையம் நகருக்கு வந்தோம்.எனது கணவர் உமர் கோயா, பழைய கபரஸ்தானில் குழி வெட்டும் வேலை செய்து வந்தார். எங்களுக்கு 5 பையன்கள்,4 பெண்கள் என மொத்தம் 9 குழந்தைகள். அதில் இருவர் இறந்துவிட்டனர்.

கணவர் 35 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். பிறகு எனது மூத்த மகன் அந்த வேலையை செய்து வந்தான்.  தற்போது உடல்நிலை சரியில்லாததால் அவனும் அந்த  வேலையை விட்டுவிட்டான். எனக்கு 34 பேரன் பேத்திகள், 75 கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர்.

முதியோர் உதவித் தொகைமூலம் வாழ்க்கையை நடத்தி வருகிறேன். இதுவரை சுமார் 15 தேர்தல்களில் வாக்களித்திருப்பேன். இன்னும் வரும் தேர்தல்களில் வாக்களிப்பேன். எனக்கு உடல் ஆரோக்யத்தை அளித்துவரும் இறைவனுக்கு நன்றி." என்றார் உற்சாகமாக.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close