Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக தேர்தலில் 232 தொகுதிகளிலும் 74 சதவீத வாக்குகள் பதிவு!

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 73.76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 தெரிவித்துள்ளது.  100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும் கடந்த சட்டமன்ற தேர்தலைவிட 4 புள்ளி 04  சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 232 தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை வெளுத்துக்கட்டியபோதும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடைமையை நிறைவேற்றினர். இந்த தேர்தலில், மொத்தம் 73.76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது, கடந்த சட்டமன்ற தேர்தலைவிட 4.04 சதவீதம் குறைவாகும்.

இதற்கு முந்தைய தேர்தல்களில் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிற்காகவும் வாக்களிக்க வருபவர்களுக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காவல் துறை, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள்  என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 100 சதவீத வாக்குப்பதிவிற்காக தேர்தல் ஆணையம் தீவிர பிரசாரம் மேற்கொண்ட போதிலும் 73.76 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ