Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னையில் விடிய விடிய கனமழை!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்துள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்நிலையில், இலங்கை அருகே வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென்தமிழகத்திலும், வடகடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில்,சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று(திங்கள்) இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. விடிய விடிய மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. காலையிலும் லேசான மழை பெய்தது. 

சென்னையின் கிண்டி, அடையாறு,தரமணி,வேளச்சேரி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்,பல்வேறு இடங்கள்  இருளில் மூழ்கின. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, சோழவரம்,செங்குன்றம், புழல் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் கன மழை கொட்டியது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ