Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தஞ்சை தொகுதியில் ரூ.6 கோடி பணம் பட்டுவாடா..! பரபரப்பு தகவல்

 

ரூ.6 கோடிக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதன் அடிப்படையில் தஞ்சை சட்டசபை தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் தஞ்சை தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் ரூ.200 முதல் ரூ.500 வரை பணம் பட்டுவாடா செய்துள்ளனர். இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு விடுதியில் ரூ.20 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அந்த பணத்தை பறிமுதல் செய்த போது சில ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அந்த ஆவணங்களில் ரூ.37 லட்சம் வரை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான தகவல்கள் கிடைத்துள்ளன.

இதேபோல் தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் காரில் அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் சில ஆவணங்கள் கிடைத்துள்ளன. அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது தஞ்சை நகரில் உள்ள 13 வார்டுகளுக்கு பணம் பட்டுவாடா செய்திருப்பது தெரிய வந்தது. அந்த ஆவணங்களில் ஒரு வாக்காளருக்கு ரூ.500 கொடுத்திருப்பது தெரிய வந்தது. 13 வார்டுகளுக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் பட்டுவாடா செய்திருப்பதால் தஞ்சை நகரில் 51 வார்டு மற்றும் தொகுதி முழுவதும் ரூ.6 கோடி வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டு இருக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து தஞ்சை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close