Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிளஸ் 2 தேர்வு தேர்ச்சியில் ஈரோடு முதலிடம்... கடைசியில் வேலூர் மாவட்டம்!

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில், ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடத்திலும், 83.13 சதவீதம் பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் 1,200 மதிப்பெண்களுக்கு 1,195 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

திருவள்ளுவரைச் சேர்ந்த பவித்ரா 1,194 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். எஸ்.கே.வி. பள்ளி, எம்.கண்டம்பாளையத்தை சேர்ந்த வேணுப்ரிதா 1,193 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்...

1. கன்னியாகுமரி - 95.7 சதவீதம்
2. திருநெல்வேலி - 94.76 சதவீதம்
3. தூத்துக்குடி - 95.47 சதவீதம்
4. ராமநாதபுரம் - 95.04 சதவீதம்
5. சிவகங்கை - 95.07 சதவீதம்
6. விருதுநகர் - 95.73 சதவீதம்
7. தேனி - 95.11 சதவீதம்
8. மதுரை - 93.19 சதவீதம்
9. திண்டுக்கல் - 90.48 சதவீதம்
10. ஊட்டி - 91.29 சதவீதம்
11. திருப்பூர் - 95.2 சதவீதம்
12. கோவை - 94.15 சதவீதம்
13. ஈரோடு - 96.92 சதவீதம்
14. சேலம் - 90.90 சதவீதம்
15. நாமக்கல் - 94.37 சதவீதம்
16. கிருஷ்ணகிரி - 85.99 சதவீதம்
17. தர்மபுரி - 90.42 சதவீதம்
18. புதுக்கோட்டை - 93.01 சதவீதம்
19. கரூர் - 93.52 சதவீதம்
20. அரியலூர் - 90.53 சதவீதம்
21. பெரம்பலூர் - 96.73 சதவீதம்
22. திருச்சி - 94.65 சதவீதம்
23. நாகை - 86.80 சதவீதம்
24. திருவாரூர் - 84.18 சதவீதம்
25. தஞ்சாவூர் - 90.14 சதவீதம்
26. விழுப்புரம் - 89.47 சதவீதம்
27. கடலூர் - 84.63 சதவீதம்
28. திருவண்ணாமலை - 90.67 சதவீதம்
29. வேலூர் - 83.13 சதவீதம்
30. காஞ்சிபுரம் - 90.72 சதவீதம்
31. திருவள்ளூர் - 87.44 சதவீதம்
32. சென்னை - 91.81 சதவீதம்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ