Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பூரில் பிடிபட்ட ரூ. 570 கோடி பணம் கோவை கொண்டு செல்லப்பட்டது!

திருப்பூர்: கடந்த 14ம் தேதி திருப்பூரில் ரூ.570 கோடி பணத்தோடு பிடிபட்ட மூன்று கன்ட்டெய்னர் லாரிகள்,  தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து பலத்த பாதுகாப்புடன் கோவை எஸ்.பி.ஐ அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்த நிலையில், கடந்த 14ம் தேதி திருப்பூர் அருகே 3 கன்ட்டெய்னர் லாரிகள் ரூ.570 கோடிகள் பணத்தோடு பிடிபட்டன. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில்,கோவை எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து 3 கன்ட்டெய்னர் லாரிகள் மூலம் ரூ.570 கோடி  பணம் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், திருப்பூர் அருகே அந்த கன்ட்டெய்னர்களை சிறைபிடித்தனர். சோதனையில், அந்த கன்ட்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சந்தேகத்தின் பேரில் அவை திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த பணம் எஸ்.பி.ஐ வங்கிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டதை யடுத்து, அந்த கண்டெய்னர்களை தேர்தல் ஆணையம் விடுவித்தது. தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கடந்த 4 நாட்களாக திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அந்த லாரிகள், பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு இன்று (செவ்வாய்) அதிகாலை கொண்டு செல்லப்பட்டன. கோவையில் உள்ள எஸ்.பி.ஐ தலைமை அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அந்த கண்டெய்னர் லாரிகளை, மீண்டும் விசாகப்பட்டினம் கொண்டு செல்வது குறித்து  அதிகாரிகள் இன்று முடிவு எடுப்பார்கள் என்று தெரிகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ