Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிளஸ்2 விடைத்தாள் மறு கூட்டல்..! நாளை வரை அவகாசம்

 



பிளஸ்2 தேர்வு விடைத்தாள் நகல் பெறுவதற்கும், மறு கூட்டலுக்கும் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 19ம் தேதி முதல் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மே 21ம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வு எழுதிய பள்ளி மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close