Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒடிசாவை நோக்கி நகரும் புயல்..! தமிழகத்தில் மழை குறையும்


வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா அல்லது ஒடிசாவை நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில் மழை குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே 120 கிலோ மீட்டர் தொலையில் மையம் கொண்டிருந்தது. தற்போது, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே 170 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா அல்லது ஒடிசாவை நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தில் மழை குறையும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகடலோர மாவட்டங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். வடகடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் நேற்று போல் மழை பெய்யும். பின்னர் படிப்படியாக குறையும்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 23 செ.மீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 15 செ.மீட்டர் மழையும், மகாபலிபுரத்தில் 14 செ.மீட்டர் மழையும், செம்பரம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலைய பகுதியில் 12 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ