Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.570 கோடி யார் பணம்? உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விளக்கம்!

 

சென்னை: திருப்பூரில் பிடிப்பட்ட ரூ.570 கோடி பணம் யாருடையது என்பது குறித்து ரிசர்வ் வங்கி, உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

டிராபிக் ராமசாமி மற்றும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தின் மர்மம் நீங்கும் வரை சட்டசபைத் தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பிற்பகலில் வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி இந்த வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''ரூ.570 கோடி பணம் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமானது. அந்த பணம் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதற்காக ஏப்ரல் மாதம் 18-ம் தேதியே அனுமதி பெறப்பட்டது.

ஏற்கனவே, இதுபோன்ற பெரிய தொகை பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தமிழகத்தில் தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரம் பெரிதுபடுத்தப்படுகிறது'' என்று விளக்கம் அளித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ