Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

6 பேர் பதவிக்காலம் நிறைவு: மாநிலங்களவை எம்.பி. தேர்தல் அட்டவணை வெளியீடு!

 

சென்னை: தமிழகத்திலுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதையடுத்து, அதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ''தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.06.2016 முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்காணும் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது:-



2. இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது. வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் 24.05.2016 முதல் 31.05.2016 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, 1881-ம் வருட செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) தவிர, பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு, தேவைப்படின், சட்டமன்ற குழுக்கள் அறையில் நடைபெறும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close