Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக ஜெ. தேர்வு!

சென்னை: அ.தி.மு.க. சட்டமன்றக் குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்த சட்டமன்ற தேர்தலில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதையடுத்து, வரும் 23-ம் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார்.

இந்நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 133 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோரி அ.தி.மு.க. குழு கடிதம் வழங்க உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ