Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு ஜூன் 13ல் தேர்தல்!

சென்னை: தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு ஜூன் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 16-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு, பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, 23-ம் தேதி தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு ஜூன் 13-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். மேலும், 2 தொகுதிகளின் வாக்கு எண்ணும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஜூன் 20-ம் தேதிக்குள் முடிவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ