Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயா டிவியை ஒளிபரப்பும் அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை!

நாகர்கோவில்: தமிழக அரசின் சாதனைகளை விளக்குவதற்காக தொடங்கப்பட்ட நடமாடும் டிஜிட்டல் திரை வாகனத்தில், ஜெயா டி.வி.யை நேரடியாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆட்சியின்போது ஜெயலலிதா அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கும் பொருட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நவீன வசதிகள் கொண்ட டிஜிட்டல் திரை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு நகரம், கிராமங்களில் அரசின் சாதனைகள் குறித்து டிஜிட்டல் காட்சிகள் மூலம் ஒளிபரப்பப்பட்டது.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவை ஒளிபரப்பு செய்வதற்காக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் டிஜிட்டல் திரை வாகனத்தில் தனியார் தொலைக்காட்சியான ஜெயா டி.வி.யை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவை நேரடியாக அனைவரும் காண வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு வாகனத்திலும், புதிய செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் டிஸ் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசு துறையின் வாகனத்தில் தனியார் தொலைக்காட்சியான ஜெயா டி.வி.யை ஒளிபரப்புவது விதிகளை மீறிய செயல் என நடுநிலையாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி, படங்கள்: ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ