Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2 தொகுதிகள் தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்த சட்டமன்ற தேர்தலின்போது தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டதால் அந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இந்த இரு தொகுதிகளிலும் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து, ஜூலை 13-ம் தேதி இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்படும் என நேற்று (20-ம் தேதி) அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே அறிவித்த 23-ம் தேதியே தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ''தஞ்சை மற்றும் அரவக்குறிச்சியில் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்த தி.மு.க. உள்ளிட்ட அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் 27-ம் தேதிக்குள் பரிசீலிக்குமாறு தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ