Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தற்காலிக சபாநாயகரானார் செம்மலை..!

 

தமிழக சட்டப்பேரவைக்கு தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர், செம்மலைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தின் 6வது முறையாக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகள் மூடல், டாஸ்மாக் நேரம் குறைப்பு, விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தற்காலிக சபாநாயகராக பதவியேற்க செம்மலை ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்மலைக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சட்டமன்றப் பேரவைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close