Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல்வர் உத்தரவு எதிரொலி...கடை திறப்பிற்காக கால்கடுக்க காத்திருந்த குடிமகன்கள்!

ராமநாதபுரம்; தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இனி 12 மணிக்கு திறக்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்பின் எதிரொலியால் குடிமகன்கள் சுமார் 1 மணிநேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 134 இடங்களைப்பெற்று அதிமுக ஆட்சி அமைத்தது. முன்னதாக அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக  அமல்படுத்தப்படும்  என தெரிவித்திருந்தது. நேற்று நடந்த பதவியேற்புக்குப்பின் முதல்வர் ஜெயலலிதா சில கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில் ஒரு உத்தரவாக தமிழகத்தில் இனி டாஸ்மாக் மதுக்கடைகளின் வேலைநேரம் குறைக்கப்பட்டு 12 மணி முதல் இயங்கும் என அறிவித்தார். தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும்  டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்பட்டன. பல இடங்களில் வழக்கமான நேரத்திற்கு வந்த குடிமகன்கள் விஷயமறிந்து 'அப்செட்' ஆனார்கள். போய்வர மனமின்றி அங்கேயே காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். பல இடங்களில் பெரும் கூட்டம் கூட்டமாக நின்று ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

படங்கள்; உ.பாண்டி
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close