Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதுச்சேரியின் அடுத்த முதல்வர் யார்...? ஓரிரு நாளில் சோனியா முடிவு

புதுடெல்லி: புதுச்சேரி முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் ஓரிருநாளில் இறுதி செய்யப்படும் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

புதுடெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை இன்று அவர் சந்தித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“ புதுச்சேரி மாநில அரசியல் நிலவரம் குறித்து ராகுல் காந்தியுடன் கலந்துபேசினேன்.

ஓரிரு நாட்களில் புதுச்சேரி முதல்வர் யார் என்பது குறித்து இறுதி செய்யப்படும். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசித்து ராகுல் முடிவெடுப்பார்” என்று நமச்சிவாயம் தெரிவித்தார்.

எடிட்டர் சாய்ஸ்