Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய வேட்பாளர்கள் கொம்பு... பழைய வேட்பாளர்கள் காது... குட்டிக் கதை சொன்ன திமுக இலக்கிய அணிச் செயலாளர்!

ன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க இலக்கிய அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம் கூறுகையில், ''நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 174 தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டு 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு 41, இந்திய முஸ்லிம் லீக் 5, மனிதநேய மக்கள் கட்சி 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மொத்தம் 60 தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. அவற்றுள் 9 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடங்கள் ஒதுக்கி, மேலும் 30 தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டிருந்தால் கண்டிப்பாக ஆட்சியைப் பிடித்திருக்கும். ஆகவே, இனிவரும் தேர்தல்களில் தி.மு.க தலைமை இதைப்பற்றி ஆலோசிக்க வேண்டும்'' எனக் கூறினார்.

கூட்டத்தில் பேச்சின் நடுவே இடைமறித்த பழனி மாணிக்கம், காசி முத்து மாணிக்கம் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்குத் தாவியவர் என்பதை சுட்டிக் காட்டும் வகையில், இவ்வளவு விவரமாகப் பேசும் நீங்கள், அ.தி.மு.க உட்பட மற்ற கட்சிகளிலிருந்து தாவி தி.மு.க.வில் சமீபத்தில் இணைந்து தேர்தலில் நிற்க இடம் வாங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையே என கேட்டார்.

பழனி மாணிக்கத்தின் இந்த கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசி முத்து ஓர் குட்டிக் கதை சொன்னார்.

''காளை மாடு பிறக்கும் போதே காதுகளுடன் பிறக்கிறது. ஆனால், கொம்பு வளர்ந்த பிறகே முளைக்கிறது. எதிரி மறைந்திருந்து தாக்க வரும் போது காதுகள் மூலமாகத்தான் காளை சத்தத்தை உணர்கிறது. உடனே மூளை உஷாராகி காளை தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், எதிரி விலங்கைத் தாக்கவும் தயாராகிறது. சண்டையிடும் போது எதிரி விலங்கை கொம்பின் மூலம் குத்திக் கிழிக்கிறது.

தி.மு.க.வின் பழைய வேட்பாளர்கள் காதுகள் போன்றவர்கள், பிற கட்சிகளில் இருந்து தி.மு.க.வுக்கு வந்து தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கொம்பு போன்றவர்கள். காதுகளும், கொம்புகளும் இணைத்து செயல்பட்டால் தான் தேர்தல் என்னும் விலங்கை எதிர்கொண்டு வெல்ல முடியும். வேட்பாளர்களுக்கு மத்தியில் பழையவர்கள், புதியவர்கள் என்னும் வேற்றுமை இருக்கக் கூடாது'' எனக் கூறி கைத்தட்டல் பெற்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ