Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பார்வை இல்லை...படிப்பில் குறைவில்லை; மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள்!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கண் பார்வையற்ற மாணவர்களில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உறவினர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை  வெளியிடப்பட்டன. இதில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் கே.கிருஷ்ணகுமார் 489 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ராணி 470 மதிப்பெண்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

புதுச்சேரி, பிள்ளைச்சாவடியில் பார்வையற்றோர் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஏ ஜெனிதா மேரி 468 மதிப்பெண்களை எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அதிக மதிப்பெண் எடுத்த பார்வையற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்களும் சக மாணவர்களும் பாராட்டி மகிழ்ந்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ