Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 ம் வகுப்பு தேர்வு: வெற்றி ரகசியத்தை சொல்லும் முதலிட மாணவர் சிவகுமார்!

விருதுநகர்: 10 ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த இரண்டு பேரில் ஒருவரான சிவக்குமார், தான் முதலிடம் பிடித்த வெற்றி ரகசியம் என்ன என்பதை தெரியப்படுத்தினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே பாடத்திட்டம் என்பதால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ, மாணவியர் எழுதினர். இவர்களை தவிர 48 ஆயிரத்து 564 பேர் தனித் தேர்வர்களாகவும் எழுதி இருந்தனர். 

இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் பெரியவள்ளிக்குளம் நோபல் மெட்ரிக் பள்ளியை சேர்ந்த சிவக்குமாரும், நாமக்கல் மாவட்டம் எஸ்.ஆர்.வி.எக்ஸல் பள்ளியை சேர்ந்த பிரேம சுதாவும் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளனர்.

முதலிடம் பெற்ற பிரேமசுதா, தனக்கு டாக்டர் ஆவதே லட்சியம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு முதலிட மாணவரான விருதுநகர் நோபல் மெட்ரிக் பள்ளியில் பயின்ற சிவகுமாரிடம் வாழ்த்து சொல்லி பேசினோம்.

“ என் அப்பா ரகுபதி , ஸ்டேட் பேங்கில் பணிபுரிகிறார். அவர் என்னை ஆடிட்டர் ஆக வேண்டும் என்று அடிக்கடி  சொல்லிக்கொண்டே இருப்பார். அது என் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சி. சின்ன வயசுல இருந்தே என்னை ஒரு ஆடிட்டராவே ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டேன். வீட்டுல கண்ணுக்குத் தெரிகிற எல்லா இடங்களிலும் ‘சிவக்குமார் சி.ஏ ’என்று எழுதி வைத்திருப்பேன். அதுக்காக 24 மணி நேரமும் படிச்சுக்கிட்டே இருந்துடல. பள்ளி நேரத்தை கொஞ்சமும் வேஸ்ட் பண்ணாம படிச்சேன். எங்கள் பள்ளியில் ஸ்டேட்  ஃபர்ஸ்ட் இதுதான் முதல் முறை. எனக்கு ரொம்ப  சந்தோஷமா இருக்கு. ப்ளஸ் 1 ல் காமர்ஸ் குரூப்தான் எடுக்கப்போகிறேன். கண்டிப்பாக ப்ளஸ் 2 விலும் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுப்பேன்." என சொன்ன சிவகுமாரின் வார்த்தைகளில் அவ்வளவு உறுதி! 

- எம். புண்ணியமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ