Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வட்டாட்சியர்களை மாற்றாதே... தாலுகா அலுவலகத்திற்கு பூட்டுப்போட்டு ஊழியர்கள் போராட்டம்!

ராமநாதபுரம்: தேர்தல் வட்டாட்சியர்களை ஒட்டு மொத்தமாகப் பணியிட மாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்திற்கு பூட்டுப்போட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக 16 வட்டாட்சியர்கள் பணியாற்றி வந்தனர். தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வட்டாட்சியர்கள் 16 பேரும் ஏற்கெனவே பணியாற்றிய இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதனைக் கண்டித்து, வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்கள் இட மாறுதல் உத்தரவை ரத்து செய்யாவிட்டால், மாவட்டம் முழுதும் உள்ள ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வருவாய்த்துறை ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

- இரா.மோகன்

படம்: உ.பாண்டி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ