Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உரிப்பவர்களை மட்டுமல்ல, விளைவிப்பவர்களையும் அழவைக்கிறது வெங்காயம்: ஓர் அதிர்ச்சி கணக்கு

 

வெங்காயத்தின் விலை அதிகமாக  உயரும் போதெல்லாம், விலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். அதாவது ஏற்றுமதி செய்யும் வெங்காயத்தின் அளவை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். ஆனால் இப்போது வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சமயத்தில் அதுகுறித்து யாரும் கவலைப்படுவதே இல்லை. காரணம் பாதிக்கப்படுபவர் விவசாயி தானே  என்ற மெத்தனம்.

இந்த நிலையில் ஒரு டன் வெங்காயம் விற்பனை செய்தால் ஒரு ரூபாய்தான் கிடைக்கிறது என அதிர்ச்சி தருகிறார் புனே சந்தையில் வணிக தொடர்பு கொண்ட விவசாயி தேவிதாஸ். “விவசாயத்தின் வீழ்ச்சியால் தினமும் ஏதாவது ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துகொண்டேதான் இருக்கிறது. இதற்கு வழக்கமான கடன் மட்டும் காரணம் இல்லை. வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதும்தான் "என்கிறார் தேவிதாஸ்.

இரண்டு ஏக்கரில் வெங்காயத்தை பயிரிட ரூ.80 ஆயிரம் செலவாகிறது. இதில் விளையும் 952 கிலோ வெங்காயத்தை புனேவில் விவசாயிகள் உற்பத்தி சந்தையில் 10 கிலோ வெங்காயம் ரூ.16 க்கு வாங்கிக் கொள்ளப்படுகிறது. ஆக ஒரு கிலோ வெங்காயம் ரூ.1.60 ஆகும்.  ஆக மொத்தம் 952 கிலோ வெங்காயத்தை ரூ.1523.20க்கு விற்பனை செய்கிறோம்.
 

விற்பனை செய்த தொகையில் ஏஜென்ட் கமிஷன் 91.35, தொழிலாளர்களுக்கான கூலி ரூ. 77.55 மற்றும் இதர செலவுகள் ரூ.33.30 ஆகும். இதை தவிர்த்து வெங்காயத்தை சந்தைக்கு ஏற்றிச் செல்லும் வண்டிக்கு வாடகையாக ரூ.1320 ஆகும்.

ஆக விற்பனை செய்த ரூ.1523.20 லிருந்து செலவுகள்  (ரூ.1320+91.35+77.55+33.30)  மொத்தம் ரூ. 1522.20 போக மீதம் 1 ரூபாய்தான் மிஞ்சுகிறது.
 
தொடர்ந்து சோகத்துடன் பேசும் தேவிதாஸ்,“இத்தனை பெரிய பாடுபட்டு உழைத்ததற்கு கிலோவுக்கு 3 ரூபாய் கிடைக்குமென எதிர்பார்த்தேன். ஆனால் கிலோவுக்கு ஒரு ரூபாய் கிடைப்பது பெருத்த ஏமாற்றத்தை தருகிறது. மேலும் வெங்காயத்தை பயிர் செய்து அறுவடை செய்ய குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் ஆகும். அந்த உழைப்புக்கான செலவுகளைக் கூட என்னால் முழுமையாக எடுக்க முடியவில்லை. ஆனால் விலை வீழ்ச்சிக்குக் காரணமாக வெங்காயத்தின் அளவு குறைந்ததும், மோசமான தரமும் என்றுதான் பலரும் கூறுகிறார்கள்.
 
வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்ததாகவும், விவசாயி நட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.20 கீழே குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரா.ரூபாவதி

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ