Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10ம் வகுப்பு தேர்வு: மாற்றுத்திறனாளிகளின் மகத்தான சாதனை!



தே
ர்வில் மார்க் வாங்குவதற்காக  மாணவர்களைத் தயார்படுத்துவதே  இன்றைய கல்வி முறையின் நோக்கமாக மாறிவிட்டது. இதற்காக பல்வேறு நோட்ஸ் வாங்கிக்கொடுப்பதும், டியூஷனுக்காக ஏராளமாக பணம் செலவுசெய்வதும் ஃபேஷனாகிவிட்ட  காலத்தில், வாழ்வாதாரமே போராட்டமான நிலையிலும், பார்வைக் குறையுடைய  மாணவர்கள் 10 ம் வகுப்பு தேர்வில்,  மாநிலத்திலேயே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பெற்று சாதனைபுரிந்துள்ளார்கள்.


தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் கிருஷ்ணகுமார், மாநில அளவில் 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

பாளையங்கோட்டையில் உள்ள பார்வைக் குறையுடையோர் பள்ளியில் படித்துவருகிறார்.

''அப்பா டாக்ஸி ஓட்டுகிறார். அம்மா மற்றும் எனது ஆசிரியர்களின் அக்கறையால்தான் அதிக மார்க் எடுக்க முடிந்தது. நான், இரவு 3 மணிக்கு எழுந்து படிப்பேன். அப்போதுதான் சத்தம் ஏதும் இல்லாம கவனமா படிக்க முடியும். வீட்டுல இருந்தா படிக்க முடியாதுனு, விடுதியில் சேர்ந்து படிச்சேன். நான் வீட்டுக்குப் போகும்போதெல்லாம், என் தம்பி பாடங்களை எனக்குப் படித்துக்காட்டுவான். அவனும் இந்த வருஷம் பத்தாவது படிக்கிறான். நானே படிப்பதைவிட, அவன் படிக்கக் கேட்கும்போது ஈஸியா மனசுல பதிஞ்சது.

முதல் ரேங்க் வரணும்கிற எண்ணம் மனசுல இருந்தது. இப்போ, ரொம்ம சந்தோசஷமா இருக்கு.

அறிவியலில் 100 மார்க் வாங்கியிருக்கிறேன். எனக்கு, ஆங்கிலம் மிகவும் பிடிக்கும். அதனால, எனக்கு ஆங்கில  இலக்கியம் படிக்கத்தான் ஆசை'' என்றார் உணர்ச்சி பொங்க.


மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகில் உள்ள ஜம்புலிங்கபுரத்தைச் சேர்ந்த மாணவி ராணி, 470 மார்க்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பாளையங்கோட்டையில் உள்ள பார்வைக் குறையுடையோர் பள்ளியில் படித்துவரும் இவருக்கும் ஆங்கில இலக்கியம் படிக்கத்தான்  விருப்பமாம். இவர்கள், சாதாரண மாணவர்களைப் போல வேறு துறைகளில் இயங்க முடியாது என்பதால், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும்.

சிறு வயதிலேயே அம்மா இறந்துவிட்டார். அப்பா, விவசாயக் கூலி. போதிய வருவாய் இல்லை.  வாழ்வதே சிரமமான  நிலையில்,  கடினப் போராட்டத்துடன்  கிராமத்தைவிட்டு வந்து விடுதியில் தங்கிப் படித்துவருகிறார். மன உளைச்சலால் அடிக்கடி தலைவலி வருமாம்.

இரண்டாவது இடம் வந்திருப்பதால், மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். சமூக அறிவியலில் 100 மார்க் வாங்கியுள்ளார்.


-செய்தி மற்றும் படங்கள்: எல்.ராஜேந்திரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ