Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டப் பேரவைத் தலைவர் வேட்பாளர் தனபால்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை:  சட்டப் பேரவைத் தலைவர் வேட்பாளராக தனபாலை நியமித்து, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 134 இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, நேற்று முன்தினம் (23-ம் தேதி) முதல்வராக ஜெயலலிதாவும், அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சட்டமன்ற சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஜூன் 3-ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, சட்டமன்ற சபாநாயகர் வேட்பாளராக தனபாலையும், துணை தலைவராக பொள்ளாச்சி ஜெயராமனையும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும், அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வத்தையும், அ.தி.மு.க சட்டமன்ற கொறடாவாக ராஜேந்திரனையும் முதல்வர் ஜெயலலிதா நியமனம் செய்துள்ளார்.

கடந்த 2011-2016 சட்டமன்றத்தில் தனபால் சபாநாயகராகவும், பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராகவும் பதவி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close