Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

சென்னை: 4 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 23-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா, அன்று மாலையே சேவூர் ராமச்சந்திரன், பாலகிருஷ்ணா ரெட்டி, வி.பாஸ்கரன், நிலோஃபர் கஃபில் ஆகிய 4 பேரை புதிய அமைச்சர்களாக அறிவித்தார்.

அதன்படி இன்று (25-ம் தேதி) சேவூர் ராமச்சந்திரன் அறநிலையத்துறை அமைச்சராகவும், பாலகிருஷ்ணா ரெட்டி கால்நடைத்துறை அமைச்சராகவும், வி.பாஸ்கரன் காதி, கிராமத்தொழில் துறை அமைச்சராகவும், நிலோஃபர் கஃபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆளுநர் மாளிகையில் ஜெயலலிதா முன்னிலையில், ஆளுநர் ரோசய்யா 4 பேருக்கும் பதவி பிரமானம் செய்து வைத்தார்.

புதியதாக 4 அமைச்சர்கள் பதவியேற்று இருப்பதன் மூலம் தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ