Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மறைந்தது மரகதவல்லி, சோகக் கடலில் மதுரை!

மதுரை; மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் யானை மரகதவல்லி திடீர் உடல் நலக்குறைவால் இறந்ததால் பக்தர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மறைந்த யானையைப்பற்றிய தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார் கோயில் பட்டர் சுரேஷ், “மரகதவல்லி அனைவரிடமும் மிகுந்த பாசத்துடன் பழகும். இக்கோயிலுக்கு 4 வயதாக இருக்கும்போது வந்தது. தற்போது 50 வயதிற்கு மேலாகிவிட்டது. கோயிலுக்கு மரகதவல்லியை பார்க்கவே தனிக்கூட்டம் வரும், காரணம் பக்தர்களிடம் அத்தனை நெருக்கமாக பழகும்.

குழந்தைகள் பயந்து போய்வந்தாலும் அவர்களுக்கு விளையாட்டு காட்டும். மூலவர் புறப்பாடின்போது முதல் ஆளாக எழில் கொஞ்ச தயாராக நிற்கும். எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் மகாலட்சுமி சன்னதி அருகே தரிசனம் கொடுக்கும். பக்தர்கள் கொடுக்கும் உணவை விரும்பி சாப்பிடும். மரகதவல்லிக்கு பீட்ரூட் மிகவும் பிடிக்கும் என்பதால் பக்தர்கள் அதை அதிகம் கொண்டுவருவார்கள்.

ராசியான யானை என்று பலரும் கருதுவதுண்டு. அதனால் தொழில் தொடங்கும் போதும் பள்ளி, கல்லுாரி செல்லும் முதல்நாள் பலரும் அதனிடம் ஆசிர்வாதம் வாங்கிச்செல்வர்.  புதிய கார் மற்றும் பைக் வாங்கும் போது அதன் சாவிகளை மரகதவல்லியிடம் கொடுத்து ஆசிர்வாதம் பெற்று எடுத்துச் செல்லுவார்கள். இறைவனுக்கு சேவை செய்த மரகதவல்லி மேல் உலகிலும் தொடர்ந்து தன் பணியை செய்யும்.” என்றார் சோகத்துடன்.

மரகதவல்லியின் மரணம் பக்தர்களை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மரகதவல்லியின் உடல் கோயில் இடமான நந்தவனத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

- சே.சின்னதுரை 
படங்கள்; ஈ.ஜெ.நந்தகுமார்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close