Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வக்கீல்கள் போராட்டத்துக்கு 'செக்' வைத்தது தமிழக அரசு!


போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்ற பதிவாளர் அளிக்கும் புகாரின்பேரில் பார் கவுன்சில் மட்டுமே நடவடிக்கை எடுத்து வந்தது. கடந்த திமுக ஆட்சியில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியிலும் உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்ற வளாகங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வழக்கறிஞர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது தமிழக அரசு. அதில், நீதிபதிகள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வழக்கறிஞர்கள் பணியாற்ற தடைவிதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலம், முற்றுகைப் போராட்டம், பதாகைகள் ஏந்திச் செல்லக்கூடாது என்றும், நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர்கள் மது அருந்திவிட்டு வந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்றும், குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களை பணியிடை நீக்கம் செய்ய நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத் திருத்தம் கடந்த  25ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் நீதிமன்ற வளாகத்திலேயே வழக்கறிஞர்கள் மோதிக் கொண்டதோடு, ஒருவரின் மண்டை உடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close