Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500 டாஸ்மாக் மூடல் இப்போதைக்கு கிடையாது..! பின் எப்போது?


முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகள் பற்றிய விவரங்களை டாஸ்மாக் நிறுவனம், மாவட்ட அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாகவும், அவை கிடைக்கப்பெற்றதும் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும்  500 டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். மேலும், டாஸ்மாக் கடை நடத்தும் நேரமும் குறைக்கப்பட்டது. அதன்படி, காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணிவரை நடக்கும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை மாற்றி உத்தரவிட்டார். இந்த நடைமுறை கடந்த 24ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

அடுத்த கட்டமாக டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகளில் 500 கடைகள் மூட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக டாஸ்மாக் அதிகாரிகள், அலுவலர்கள் தினமும் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கையின் தொடக்கமாக அனைத்து மாவட்டங்களிலும் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் கடைகளை அடையாளம் காண மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில் மாவட்ட மேலாளர்கள் இறங்கியுள்ளனர். அடையாளம் காண்பதற்கான அம்சங்களை அதிகாரிகள் வகுத்தளித்துள்ளனர். அதில் முதன்மையானது, மக்களின் மிகுந்த எதிர்ப்புக்கு உள்ளான டாஸ்மாக் கடைகளாகும்.

இந்த நடவடிக்கைகள் பற்றி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவுகளை தற்போது அனுப்பியுள்ளோம். இதுவரை மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியலை அனுப்பவில்லை. அதை அனைத்தையும் பெற வேண்டியதுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை கடைகளை மூட வேண்டும் என்று குறிப்பிட்டு உத்தரவிடவில்லை. மக்கள் கடுமையாக ஆட்சேபிக்கும் கடைகள்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டு மூடப்பட உள்ளன.

மாவட்ட அலுவலர்களிடம் இருந்து விவரங்கள் வரப்பட்ட பிறகுதான் அரசுக்கு அறிக்கை அனுப்ப முடியும். இந்த விவரங்களை விரைந்து பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எத்தனை நாளில் கடைகள் மூடப்படும் என்ற விவரத்தை உடனே கூறிவிட முடியாது. மூடப்படும் கடைகளின் பட்டியல் முழுமையாகக் கிடைத்த பிறகுதான் அதுபற்றி கூற முடியும். கடை விவரங்கள் கிடைத்ததும் அரசுக்கு அறிக்கை அனுப்பி ஒப்புதல் பெறப்படும். பின்னர் அவற்றை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ