Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

16 ஆண்டுகளுக்குப் பின் உருண்ட தேர் கவிழ்ந்த சோகம்!



புதுச்சேரி கதிர்காமத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் தர்மராஜா பாஞ்சாலி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 11ம் தேதி பிரமோற்சவ விழா தொடங்கியது. நேற்று தீ மிதி விழாவும், 16 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டின் பின்புறம் உள்ள தெருவில் தேர் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை தேரை கோயிலுக்கு கொண்டு வரும் முயற்சியில் பக்தர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அருகில் இருந்த பள்ளத்தில் தேரின் ஒரு சக்கரம் சிக்கியது. இதில் தேர் சரிந்து விழுந்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் சரவணன் என்ற தச்சுத் தொழிலாளி தேரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேரை நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து முன்னாள் முதல்வர் ரங்கசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் நடந்த தேரோட்டத்தில் தேர் சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.முருகன்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close