Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜூன் -10-ந்தேதி வரையில் மீன் விலை குறையாது, காரணம் தெரியுமா ?

ட்டுமரத்தில் சென்று சிறு வலைகளை வீசி,  கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் இறுதிவரை சிறிய ரக மீன்களை மட்டுமே பிடித்து வந்த சென்னை மீனவர்கள், இந்த 45 நாட்கள் வனவாசம்( மீன்பிடி தடை காலம்) முடிந்து நேற்று அதிகாலைமுதல் கடலுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் பாதியிலிருந்து மே-மாதம் முடிய, சரியாக 45 நாட்கள் என்ற கால அளவில் மீன்களின் இனப்பெருக்க நாளாக கண்டறிந்துள்ளனர். ஆகவே, இந்த காலகட்டத்தில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க தேசிய மீன்வளத்துறை தடை விதிப்பு செய்துள்ளது.

இப்போது கடலுக்கு சென்றவர்கள் ஜூன் 10 தேதிக்குப்பிறகு அவர்கள் கரைக்கு திரும்புவார்கள் என்பதால் அதுவரையில் தூண்டில் மீன்களுக்கும், ஆற்று மீன்களுக்கும் கிராக்கி இருக்கும்.

தமிழகத்தின் பிரமாண்டமான மீன்துறைமுகமும்  மீன் சந்தையுமான சென்னை காசிமேடு இதனால் வெறிச்சோடிக் காணப்படுகிறது. வங்காள விரிகுடாவின் வால் பகுதியான தமிழக கடற்கரையில் ஏலம் எடுக்கப்படும் மீன்கள் உலகளாவிய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. மீன் உணவை தொடர்ச்சியாக எடுத்துப் பழகியவர்கள்,  இந்த தடைக்காலம் பற்றி அறியாமல் கடற்கரைக்கு இந்த விடுமுறை நாட்களில் வந்தபோதும் அவர்களை கடற்கரைச் சந்தை ஏமாற்றவில்லை ஆம், அவர்களுக்கும் மீன் கிடைக்கும், அவைகள் வலை வீசி பிடிக்காத தூண்டில் மீன்கள்.

வலைவீசி பிடிக்கப்படும் கடல் மீன்கள் இல்லாத நிலையில் சிலர் ஆற்று மீன்களையும் இங்கே கொண்டு வந்து சந்தைப்படுத்தி விடுகின்றனர். உள்ளூர் மக்களுக்குதான் கடல்மீன் அதிகமாக ருசிக்கும். வெளியில் இருந்து வருபவர்களுக்கு 'ஏதோ கிடைக்கிறது , அது மீனாக இருக்கிறது' என்ற மன நிலைதான். அதனால் இங்கே வருகிறவர்கள் வெறுங்கையுடன் திரும்பிப் போக வேண்டியதில்லை.

ஆறு மற்றும் ஏரி மீன்கள், நண்டுகள் ஆகியன தங்களை  நம்பி வந்தவர்களை  ஏமாற்றாமல் கடற்கரையில்  குவிந்திருந்த காலம் மாறி இனி, கடலில் வலைவீசி பிடிக்கப்பட்ட மீன்களே கிடைக்கப் போகிறது. பத்து அல்லது 15 நாட்கள் வரையில் கடலில் 'தங்கல்' இருந்துவிட்டு (கடலிலேயே மீன்பிடி விசைப்படகில் தங்கி மீன்பிடித்து வருதல்) பின்  வலையில் சிக்கிய மீன்களோடு கரைக்கு திரும்பும் ஒவ்வொரு வருகையும் மீனவர்களுக்கு உயிர் பிழைக்கும் தீபாவளிதான்..

கரைக்கு திரும்பும் மீன்களை  சந்தைப் படுத்தும் வரையில் அது கெட்டு விடாமல் இருக்க,  கையோடு ஐஸ் பெட்டிகளை கொண்டு போய் விடுகிறார்கள். குறைந்த பட்சம் 10 முதல்15 நாட்களுக்குள்  மீனவர்கள் கரை திரும்புகிறார்கள்.

நடுத்தர பொருளாதாரம் இருப்பவர்களின் கண்களில், சங்கரா, நவரை, கானாங்கெழுத்தி, மத்தி,  சிறு மடவை போன்றவைகள்தான் படும். ஏனெனில் இவைகளை 100 முதல் 200 ரூபாய் வரை வாங்கி விடலாம்.  ஐவர் மட்டுமே உள்ள குடும்பத்துக்கு அது போதுமானது.

வஞ்சிரம், கொடுவா, முசல்பாறை, பால்சுறா, கிழங்கான், வவ்வா, டைகர் எறால் பக்கமா எட்டிப் பார்ப்பதென்றால் பர்ஸ் கனமாக இருக்க வேண்டும். சங்கரா வகை மீன்களை விட இவைகள் இரு மடங்கு விலை அதிகம் கொண்டவை.

மனித

உடலுக்கு கெடுதல் செய்யாத அசைவ உணவு கடலுணவுதான். கொல்கொத்தாவில் சைவ விரும்பிகள் கூட "கடல் புஷ்பம்" என்ற பெயரிட்டு மீன்களை உண்ண ஆரம்பித்து விட்டார்கள். அந்நியச் செலாவணியை அதிகம் ஈட்டித் தருவதில் மீன் உணவே தொடர்ந்து முக்கிய இடத்தில் இருந்து வருகிறது.

அடுத்து வரும் நாட்களில் வங்காள விரிகுடா, கடற்கரைச் சந்தை புத்தம்புது மீன்களால் களை கட்ட ஆரம்பித்து விடும். அசைவப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்!


- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close