Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக சட்டமன்றத்திற்கான நியமன உறுப்பினராக மீண்டும் டாக்டர் நான்சி நியமனம்!

சென்னை; 15 வது தமிழக சட்டமன்றத்திற்கான நியமன உறுப்பினராக டாக்டர் நான்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்தமுறை இதே பதவியை வகித்தவர்.

தமிழக சட்டமன்றத்திற்கான 15 வது சட்டமன்றத்தேர்தல் சமீபத்தில் நடந்துமுடிந்தது. இதில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினருக்கான பிரதிநிதித்துவப்படி நியமன உறுப்பினராக அரசியலமைப்புசட்டப்படி ஒருவரை நியமிப்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை.

அதன்படி கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த நான்சி என்பவரை இந்த 15 வது சட்டப்பேரவைக்கான நியமன உறுப்பினராக நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார். மருத்துவரான இவர் ஏற்கெனவெ இந்த பதவியை வகித்தவர் என்பது என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ