Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு... இலங்கை கடற்படை அட்டூழியம்!

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைகாலத்திற்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற முதல் நாளிலேயே ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீன்கள் இனப்பெருக்கத் திற்காக கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் 45 நாள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. பழவேற்காடு துவங்கி கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதிகளில் இந்த தடை இம்மாதம் 29-ம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.

இதை தொடர்ந்து, தமிழக மீனவர்கள் நேற்று அதி்காலை மகிழ்ச்சியுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இதேபோல், ராமேஸ்வரத்தில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள், பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகினையும் அதில் இருந்த 7 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் 7 பேரும், மன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு சொல்லப்பட்டுள்ளனர்.

45 நாட்கள் மீன்பிடி தடைக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற முதல் நாளிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றிருப்பது, மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ