Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கோகுல்ராஜ் கொலை செய்யப்படவில்லை..!'- ஜாமீனில் வந்த யுவராஜ் பேட்டி


'கோகுல்ராஜ் கொலை செய்யப்படவில்லை, தற்கொலை என்பதை நிரூபிப்பேன்' என ஜாமீனில் வெளியே வந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் கூறினார்.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.

இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னர் வேலூர் மத்திய சிறையில் யுவராஜ் அடைக்கப்பட்டார். கடந்த ஜனவரி 7ம் தேதி அதாவது, மூன்று மாதங்களுக்கு பிறகு 700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் யுவராஜ் உள்பட 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு யுவராஜ் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், "கோகுல்ராஜ் கொலை செய்யப்படவில்லை, தற்கொலை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது. அனைத்து மதத்துக்கும் பொதுவான கோயில் நீதிமன்றம். அனைவருக்கும் பொதுவான கடவுள் நீதிபதி. எனக்கு அவர்கள் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்து உண்மைகளையும் நீதிமன்றத்தின் மூலமாக வெளிக் கொண்டு வருவேன். அப்போது தற்கொலைதான் என்று நிரூபிக்கப்படும்.

அதேபோல, டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணமும் நிர்ப்பந்த கொலைதான். இது திட்டமிட்ட நிர்ப்பந்தக் கொலை. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்பவே என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. என் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன். அவர்கள் இரண்டு பேர் நீதிமன்றத்தின் மூலம் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்' என்று கூறினார்.

யார் அந்த இரண்டு பேர் என்று கேட்டதற்கு பதில் கூற யுவராஜ் மறுத்துவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close