Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள்:நடிகர் செந்தில் வேதனை!


மதுரை: தான் இறந்து விட்டதாக செய்தி பரப்பும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நடிகர் செந்தில் மதுரை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது நகைச்சுவை நடிகர் செந்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வாட்ஸ் அப்பில் பரவின.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நான் நலமுடன் இருக்கிறேன் என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.பின்னர் அந்த வதந்திகள் பரவவில்லை.

இந்நிலையில், மீண்டும் நேற்று(திங்கள்) முதல் வாட்ஸ் அப்பில்,அதே வதந்தி பரவி வருவதாக நடிகர் செந்தில் கூறியுள்ளார்.இது தொடர்பாக மதுரை போலீஸாரிடம் "தான் இறந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது திமுகவினரின் தூண்டுதல் பேரில் நடப்பதாக தெரிகிறது" என்று  புகார் தெரிவித்துள்ளார்.

செந்திலின் வீடியோ பேட்டி.... 

 

    

 

 படம்: வி.சதீஷ்குமார்
வீடியோ: இ.ஜே.நந்தகுமார்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ