Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்கள் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காவிடில்... எச்சரிக்கும் மீனவர்கள்!

ராமேஸ்வரம்: இலங்கை வசம் உள்ள படகுகளையும், தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிடில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் அதிரடியாக அறிவித்து உள்ளனர்.

மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை பகுதியில் கடல் வளத்தை பெருக்கும் வகையில் ஆண்டு தோறும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 15-ம் தேதி முதல் துவங்கும் இந்தத் தடைக் காலம் மே 29-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. 30-ம் தேதி அதிகாலை முதல் தமிழக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்நிலையில், தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற முதல் நாளிலேயே ராமேஸ்வரத்தை சேர்ந்த சேசு இருதயம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதில் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். இலங்கை கடற்படையினரின் விசாரணைக்கு பின், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் தற்போது வவுனியா சிறையில் உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில்,, நேற்று ராமேஸ்வரத்தில் அவசர கூட்டம் நடத்திய மீனவர்கள், இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், சுமார் 99 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடில் இம்மாதம் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதனிடையே தடைகாலம் முடிந்து 2வது நாளான நேற்று மீன்பிடிக்க சென்ற மேலும் 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ள்னர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் கடற்கரையில் இருந்து நேற்று மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 4 மீனவர்களும் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் நேற்று இரவு மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததுடன், அவர்கள் பயன்படுத்திய வலைகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.

மீன்பிடி தடை காலமான 45 நாட்கள் வேலை வாய்ப்பின்றி வருமானத்தை இழந்து வந்த மீனவர்கள், கடன் பெற்று தங்கள் படகுக்ளை சரி செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டு வருவது, தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

-இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close