Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

93-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் கருணாநிதி! -அண்ணா, பெரியார் நினைவிடத்தில் மரியாதை

சென்னை: தனது 93-வது பிறந்தநாளை இன்று கேக் வெட்டி கொண்டாடிய கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது பிறந்த நாளை முன்னிட்டு, சி.ஜ.டி காலணியில் உள்ள அவரது வீட்டில் அதிகாலையில் அரச மரக்கன்றை நட்டார். அப்போது, சென்டை மேளம் முழங்க குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை அவர் ஏற்றார். அப்போது, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி‌.ஆர்.பாலு, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அவர், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்திற்கும், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற கருணாநிதி, அங்கு குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கேக் வெட்டி தொண்டர்களின் வாழ்த்தையும் பெற்றுக்கொண்டார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது மனைவியுடன் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார். தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் திருச்சி சிவா ஆகியோரும் கருணாநிதிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், மோகன், செந்தில்குமார், சுதர்சனம், அன்பில் மகேஷ், பொய்யாமொழி உள்ளிட பலரும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து கருணாநிதியை வாழ்த்த அவரது இல்லத்திற்கு தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் தி.மு.க. தொண்டர்கள் உற்சாக மிகுதியில் குழுமி உள்ளனர்.

படங்கள்: பா.காளிமுத்து

எடிட்டர் சாய்ஸ்

MUST READ