Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொலைப் புகாரில் சபாநாயகர் தனபால்? - அதிரவைக்கும் அ.தி.மு.க பிரமுகர் மரண விவகாரம்!

சேலம் அ.தி.மு.க பிரமுகரின் மரணத்திற்கு காரணம் எனச் சொல்லப்படும் சபாநாயகர் தனபால் மற்றும் இரண்டு அமைச்சர்கள் மீதான வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ளது. ' வருகிற 16-ம் தேதி விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் பரபரத்துக் கிடக்கிறது ஆளும்கட்சி வட்டாரம்.
 
கடந்த 2007-ம் ஆண்டு, முரசொலி பத்திரிகையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து சில வாசகங்கள் வெளியாகி இருந்தன. இதனைக் கண்டித்து தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எதிராக மாநிலம் முழுவதும் அ.தி.மு.கவினர் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் முடிவில், சேலம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்டோர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். மறுநாள் அதிகாலை 3 மணியளவில், மாவட்ட எம்.ஜி.ஆர் அணியின் துணைத் தலைவர் சுகுமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர் இறந்து போனார்.


இந்த சம்பவத்தின் பின்னணியில் அ.தி.மு.க முக்கிய பிரமுகர்கள் செல்வகணபதி, தனபால், தோப்பு வெங்கடாச்சலம், தங்கமணி, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதன்பின்னர் இந்த விவகாரம் கண்டு கொள்ளப்படவில்லை. இந்நிலையில், சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி, நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார். சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில், விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார் நீதியரசர் நாகமுத்து.

இதன்பின்னரும், குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாமல் காவல்துறை அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில், நேற்று நீதியரசர் பிரகாஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்போது அவர், ' வழக்கின் நிலவரம் குறித்து வருகிற 16-ம் தேதி  மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ராமகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்' என அதிரடியாக உத்தரவிட்டார். நீதியரசரின் இந்த கண்டிப்பால் அ.தி.மு.க பிரமுகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

இந்நிலையில் சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் தலைவர் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.

" வேறு ஒரு வழக்கிற்கான ஆவணங்களைத் தேடும்போதுதான் சுகுமாரின் மரணம் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைத்தன. அதிலும், சம்பவம் நடந்த 9.7.07 அன்று அதிகாலை, ' சுகுமாருக்கு நெஞ்சுவலி' என்ற தகவல் வந்ததும், அவரது லாக்அப்புக்குள் நுழைந்த சிறை அதிகாரி கருப்பண்ணன், அவரை மோகன் குமாரமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸை வரவழைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.கவினர், 'சுகுமாரைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். மருத்துவர் இங்கே வந்தாக வேண்டும்' என தகராறு செய்துள்ளனர்.

அதிகாலை 4.30 மணியளவில் இந்த தகராறு நடந்தது. ஒருகட்டத்தில், அ.தி.மு.கவினர் சிறை அதிகாரிகளோடு சண்டை போடப் போக, ஸ்ட்ரெச்சரில் இருந்த சுகுமாரின் உடல் கீழே விழுந்துவிட்டது. அதை கண்டுகொள்ளாமல் சண்டை போட்டுள்ளனர். ' ஆறு மணியளவில் சுகுமார் இறந்துவிட்டார்' என்பதை சிறை மருத்துவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். பத்து மணியளவில் சுகுமாரின் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு தனி விமானத்தில் வந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, 'மரணத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனப் பேட்டியளித்தார்.

அப்போதைய முதல்வர் கருணாநிதி, இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். சுகுமார் மரணம் தொடர்பாக அறிக்கை அளித்த சிறை அதிகாரி கருப்பண்ணன், 'சுகுமாரை மருத்துவச் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது, செல்வகணபதி, எடப்பாடி பழனிச்சாமி, தனபால், தோப்பு வெங்கடாச்சலம், தங்கமணி உள்ளிட்டோர் தகராறு செய்தனர். உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க இவர்கள் அனுமதிக்கவில்லை. ஸ்ட்ரெச்சரைத் தள்ளிவிட்டதால் சுகுமார் கீழே விழுந்துவிட்டார். அவரது சாவுக்கு இவர்கள்தான் காரணம்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்னர் சேலம் ஆர்.டி.ஓவும், விசாரணை செய்து அரசுக்கு அறிக்கை அளித்தார். இதன்பின்னரும் இந்த வழக்கு கண்டுகொள்ளப்படவில்லை. இதுதொடர்பான ஆவணங்கள் கிடைத்ததும், சேலம் மாநகர ஆணையருக்கும் காவல்துறை தலைவருக்கும் புகார் அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று சுகுமாரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். சட்டப்படி உரிய நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார் விரிவாக.

சபாநாயகராக தனபால் பதவியேற்ற முதல்நாளிலேயே, விசாரணை அதிகாரிக்கு 'செக்' வைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். விசாரணையின் போக்கு எப்படிச் செல்லப் போகப்போகிறது என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் சுகுமாரின் குடும்பத்தினர்.

-ஆ.விஜயானந்த்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ