Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்துங்கள்! -அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசை ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 2016-17-ம் கல்வியாண்டுக்கான பாட வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், கல்விக் கட்டணக் கொள்ளை குறித்த புகார்களும் மலை போல குவியத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக கடைசியாக அமைக்கப்பட்டக் குழு நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழு தான். அக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்து விட்டது. அக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கான கட்டண விகிதமும் காலாவதியாகிவிட்டது.

இதுபோன்ற சூழல்களில் கடந்த ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தான் இந்த ஆண்டும் பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க வேண்டும். ஆனால், தனியார் பள்ளிகளோ, இவ்வாண்டு தங்களைக் கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை என்று கூறி, விருப்பம்போல கட்டணம் வசூலிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு வாய்மூடி ஊமையாக இருக்கிறது.

நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பது தமிழக அரசுக்கு ஏற்கனவே தெரியும். மாணவர்களின் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்தால் நீதிபதி சிங்காரவேலு ஓய்வு பெற்றதுமே புதியக் குழுவை அமைத்து கட்டண நிர்ணயத்திருக்கலாம் அல்லது நீதிபதி சிங்காரவேலு குழுவின் பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்கள் நீட்டித்து புதிய கட்டணத்தை நிர்ணயித்து வழங்கும்படி கூறியிருக்கலாம். ஆனால், அவ்வாறு தமிழக அரசு செய்யவில்லை.

தனியார் பள்ளிகள் அளவுக்கதிகமாக கட்டணம் வசூலிப்பதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி இலவசமாக நிரப்பப்பட வேண்டிய 25 சதவீத இடங்களும் முறையாக நிரப்பப்படவில்லை.

உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். கடந்த ஆண்டுக்கான கட்டணத்தைவிட அதிகமாக வசூலித்த பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று கூறி உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close