Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிருஷ்ணகிரி அருகே லாரி-பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 17 பேர் பலி!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே லாரி-பஸ்-கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மேலமலை அருகே இன்று (3-ம் தேதி) மாலை 3 மணியளவில்,  லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைகுலைந்த லாரி, எதிரே வந்த தனியார் பஸ் மீது பயங்கரமாக மோதியது. அப்போது பின்னால் வந்த காரும் மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 30 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சிகிச்சைப் பெற்று வருபவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதி பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், கிருஷ்ணகிரி கலெக்டர் கதிரவனும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close