Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் கட்சியில் இருந்து நீக்கம்! -ஜெயலலிதா அதிரடி

சென்னை: காஞ்சிபுரம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் கட்சியிலிருந்து நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த புல்லட் கே.பரிமளம் (மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்), பி.உமா மகேஸ்வரி (காஞ்சிபுரம் நகர 6-வது வார்டு செயலாளர்), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பி.பி.சாமிநாதன் (கபிலர்மலை ஒன்றிய செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கட்சி தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close