Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சிதம்பர ரகசியத்தை கருணாநிதி விளக்கவேண்டும்!'- கருணாநிதிக்கு தமிழிசை நீ.......ண்ட பதிலடி

சென்னை; தமிழக தேர்தலிலின் வெற்றி முன்கூட்டியே தெரிந்திருந்ததால்தான் காலை 10 மணிக்கே ஜெயலலிதாவுக்கு மோடி  வாழ்த்து சொன்னதாக கருணாநிதியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை, கடந்த கால சிதம்பர ரகசியத்தை கருணாநிதி விளக்கவேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 'ஆட்சி அமைக்க முடியாத ஆத்திரத்தில் ஒரு பொய்யுரையை பிறந்தநாள் உரையாக கலைஞர் ஆற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற காழ்ப்பு உணர்ச்சியில் மோடி அவர்கள் மீது பாய்வது வியப்பை தருகிறது. வாய்ப்பு உங்களுக்கு பறிபோனது காங்கிரஸ்தான் காரணம் என்று உங்கள் கட்சியினரே சொன்ன பின்பும் மோடி அவர்களை குறை சொல்லுவது ஏன்?

அ.தி.மு.க ஆட்சி அமைந்ததற்கு மோடி அவர்கள் சொன்ன வாழ்த்தே காரணம் என தவறான கருத்தை பரப்புவது கண்டனத்திற்கு உரியது. தனது 93வது பிறந்தநாள் உரையில் அப்பழுக்கற்ற பிரதமரை பார்த்து ஜனநாயகத்துக்கு விரோதமாக ஒரு குற்றச்சாட்டு சுமத்துவது ஏற்றுகொள்ள முடியாது. '10 மணிக்கே மோடி வாழ்த்து சொல்லிவிட்டார் அதனால் இவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றி பறிபோய்விட்டது' என்கிறார். மோடி அவர்கள் தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து Twitter பதிவு செய்து இருப்பது சரியாக காலை 11:15 மணிக்கு.

இன்று வாக்கு எந்திரம் முலம் எண்ணப்படும் வாக்குகள் விரைவில் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு  தொடங்கி 1 மணி நேரத்திற்கு உள்ளாகவே தேர்தல் முடிவு நிலவரம் அனைத்து தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்களில் வருகிறது.  10 மணி அளவில் முன்னணி நிலவரம் மட்டுமல்ல 11 மணி அளவில் பல உறுதி செய்யப்பட்ட வெற்றிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட  நிலையில் பிரதமர் 11.15 மணிக்கு தமிழகத்திற்கு வாழ்த்து சொன்னார்.

அவர் இங்கு மட்டுமல்ல அதற்கு முன்னரே 11.14 மணிக்கு மேற்கு வங்கத்திற்கும், 11.23 மணிக்கு அசாம் வெற்றிக்கும், 11.26 மணிக்கு கேரளா நிலவரத்துக்கும் தன் கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அப்படி என்றால் எல்லா தேர்தல் முடிவுகளும்  அவரது வாழ்த்தால் மாறியதா?  சுமார் 18 ஆண்டுகள் மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்த கலைஞர் இதைதான் செய்தாரா? கடந்த காலத்தில் சிதம்பர வெற்றிகள் இப்படிதான் சிதைத்து வாங்கப்பட்டதா என்ற சிதம்பர ரகசியத்தை கலைஞர் விளக்குவாரா? தாங்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றப்போது நம் மாநிலத்தில் தாங்கள் பெற்ற வெற்றிகள் எல்லாம் அத்தகையதுதானா?

வாழ்த்து சொல்லி தேர்தல் முடிவுகளை மாற்றமுடியும் என்றால் மோடி ஏன் டெல்லி சட்டமன்ற முடிவுகளை மாற்றவில்லை. பீகாரில் எப்படி எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தார்கள்? தன் கட்சிக்கு தோல்விகள் வந்த போதும் அதனை தன் தோளில் சுமந்து கொண்டே தன்னலம் இன்றி நாட்டுக்கு உழைத்துவரும் மோடி அவர்களின் மீது வீண் பழி சுமத்துவதும் தவறான கருத்துக்கள் பரப்புவதும் கலைஞர் அவர்களுக்கு அழகல்ல என்று வலிமையாக எடுத்துகூறி வன்மையாக கண்டிக்கிறேன்.

அதுமட்டுமல்ல கண்டெய்னர் லாரிக்கும் பதில் சொல்ல வேண்டியது மத்திய அரசு என்ற தொனியில் பேசுகிறார் அது அரசு வங்கிகளின் பணம் என்று பொறுப்பான உயர் வங்கி அதிகாரிகள் உறுதி செய்துவிட்ட பின்பும் மத்திய அரசு பதில் சொல்லவில்லை என்கிறார். இன்று வலிமையான எதிர்க்கட்சியாக வந்ததில் 2ஜி பண வலிமையையும் இருக்கிறது என்ற உண்மை உங்கள் மனசாட்சிக்கும், மக்களுக்கும் தெரியும். நீங்கள் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணைய அலுவலர்கள், யோக்கியர்கள். தோல்வி அடைந்தால் அயோக்கியர்கள். வெற்றி பெற்றால் மக்கள், இல்லையென்றால் மந்தை ஆடுகள்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் மோடி வாழ்த்து மாற்றி விட்டது என்கிறார் என்றால் நீங்களுமா? இது கூடா நட்பினால் வந்த சாயலா? ” இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழசை தெரிவித்துள்ளார்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ