Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான் ரெடி... நீங்க ரெடியா..? -மோடிக்கு சவால்விடும் இளங்கோவன்!

சென்னை: சட்டப்பூர்வமாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கும் முன்னரே பிரதமர் மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுதான் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கின்றேன், மோடி தயாரா என்று இளங்கோவன் சவால் விடுத்துள்ளார்.

சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''தமிழகத்தில் சட்டப்பூர்வமாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கும் முன்னரே பிரதமர் மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தது தான் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அன்று மாலை 6 மணிக்கு மேல் தான் அதிகாரப்பூர்வமாக வெளிவந்திருக்கிறது. 11 மணி வரை 3 சுற்றுதான் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 சுற்றுகளில் பல இடங்களில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் முன்னணியில் இருந்திருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 18 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.

ஆனால், மோடி தொலைபேசியில் ஜெயலலிதாவிற்கு வாழ்த்து சொன்னபிறகு, தேர்தல் அலுவலர்களும், வாக்கு எண்ணும் அலுவலர்களும் மோடிக்கு பயந்து கொண்டு, காங்கிரஸ்காரர்களையும், திராவிட முன்னேற்றக்காரர்களையும், வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவிக்கின்றார்கள். இது தொடர்பான எந்த விசாரணைக்கு நான் தயாராக இருக்கின்றேன், மோடி தயாரா என்று நான் கேட்கின்றேன்.

மேலும், தேர்தல் பறக்கும்படையால் பிடிக்கப்பட்ட 570 கோடி ரூபாயில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு 30 சதவீதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்த விஷயம் தற்போது மறைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆகவே, அந்த 570 கோடி ரூபாய் கொண்டு போனதை பற்றி உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கருணாநிதி கேட்டிருக்கிறார். அதையே நானும் கேட்கிறேன்.

இப்படி கேட்பது தவறு என்று தமிழிசை சவுந்தரராஜன் எப்படி சொல்கின்றார் என்று எனக்கு தெரியவில்லை. அந்த 570 கோடி ரூபாயை முறையாக தான், சட்டப்படித்தான், கொண்டு சென்றோம் என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டிய கடமை ஜெயலலிதாவைவிட, தமிழிசை சவுந்தரராஜனுக்கே அதிகம் உண்டு.

முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர்கள் சந்திக்க நேரம் ஒதுக்காததால் தமிழகத்திற்கான பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை. இதேபோல், மத்தியில் ஆளும் பிரதமர் மோடியும் பல்வேறு திட்டங்களை கூறிவிட்டு, தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ