Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் தமிழக பா.ஜ.க! -தலைவர் பதவிக்கு வரிந்து கட்டும் சீனியர்கள்

மிழக பா.ஜ.கவில் நிர்வாகிகள் மாற்றம் எந்த நேரம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் பா.ஜ.க தொண்டர்கள். ‘ மாநிலத் தலைமையில் மாற்றம் வரும்’ என்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது பா.ஜ.க. கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட சிலர் மட்டுமே கணிசமான அளவுக்கு வாக்குகளைப் பெற்றனர். ‘ தேர்தல் முடிந்ததும் தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகிகள் பலர் மாற்றப்படுவார்கள்’ என்ற பேச்சு எழுந்தது. இதுதொடர்பாக, புதிய நிர்வாகிகள் பட்டியலை தயாரிக்கும் வேலையில் பா.ஜ.கவின் அகில இந்தியத் தலைமை ஈடுபட்டுள்ளது. இதில், ‘ மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாற்றப்படவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க. நிர்வாகி ஒருவர்,

“பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான பிறகு, மாநிலத் தலைவர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார் தமிழிசை. இல்லாவிட்டால், 2015 டிசம்பர் வரையில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைவராக நீடித்திருப்பார். எங்கள் கட்சியில் தலைவர் பதவி என்பது மூன்று ஆண்டுகள். தமிழிசை நியமிக்கப்பட்ட சில மாதங்களில், ‘ அடுத்த தலைவர் யார்?’ என்ற கேள்வி எழுந்தது. 2016 பிப்ரவரி மாதம் தன்னுடைய மகன் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தார் தமிழிசை.

அந்த நேரத்தில், அகில இந்திய தலைமையும், ‘ தமிழிசையே தொடரட்டும்’ என வாய்மொழியாகத்தான் உத்தரவிட்டது. எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் இதுவரையில் வரவில்லை. புதிய தலைவர் நியமிக்கப்பட்டால், 2018-ம் ஆண்டு வரையில் அவருடைய பதவிக் காலம் தொடரும். ‘ மீண்டும் தமிழிசையே தொடர்வாரா அல்லது புதிய தலைவர் வருவாரா?’ என்பதெல்லாம் சில நாட்களில் தெரிந்துவிடும். இதை உணர்ந்துதான், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் தலைமை பதவிக்குத் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

தவிர, சட்டமன்றத் தேர்தலில் ஓரிரு இடங்களில் பா.ஜ.க வெற்றிருந்தால், தமிழிசையின் பக்கம் தலைமையின் கவனம் திரும்பியிருக்கும். இந்தத் தேர்தலில் பா.ஜ.க பெரிதாக சோபிக்கவில்லை என்ற வருத்தம் பிரதமருக்கு நிறைய உண்டு. மீடியாக்கள் முன்பு மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் தலைமை, மக்கள் மத்தியில் எடுபடாமல் போனது, தேர்தல் பிரசாரத்திற்கு ஆட்களை சரிவரத் திரட்டாதது, மத்திய அமைச்சர்களின் கூட்டங்களுக்கு மக்கள் வராதது என தமிழக பா.ஜ.க மீது அமித் ஷா கடும் கோபத்தில் இருக்கிறார். களத்தில் நன்கு உழைக்கும் நிர்வாகிகளை நியமிக்கும் முடிவில் இருக்கிறார். இதில், மாநில துணைத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், அணித் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் என அனைத்து மட்டத்திலும் எதிர்பாராத மாற்றம் நடக்கும்” என்றார் அதிரடியாக.

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close