Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிலம்... நீர்... நீதி... நீர் நிலைகளைப் பாதுகாக்க பிரசாரம்!

சென்னை பெருமழைக்கு பிறகு விகடன், நிலம்... நீர்... நீதி... சார்பில் நீர் நிலைகள் பாதுகாப்பு சம்பந்தமாக பல பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக நிலம்... நீர்... நீதி... மற்றும் இந்திய சுற்றுச்சூழலியலாளர்கள் அமைப்பு (இ.எஃப்.ஐ) இணைந்து நீர் நிலைகளை காக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று (4-ம் தேதி) தொடங்கியது.

முதற்கட்டமாக சென்னையைச் சுற்றியுள்ள வண்டலூர், ஒரகடம், படப்பை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் நிலைகள் பாதுகாப்பு, நீர் சேமிப்பு பற்றிய பிரசார பயணம் வண்டலூரில் தொடங்கியது. வண்டலூரைச் சுற்றியுள்ள படப்பை, வைப்பூர், காரணமங்கலம் ஆகிய கிராமங்கள் வழியாக பிரசார வாகனம் வலம் வந்தன. ஒவ்வொரு இடத்திலும் நின்று நீர் நிலைகளின் அவசியம், தேவை, அதன் பாதுகாப்பு பற்றி மக்களிடையே பேசப்பட்டது.

காலை வண்டலூர் சித்தேரியை தூய்மைப்படுத்தும் பணிகளில் இ.எஃப்.ஐ அமைப்பினர் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்த விழிப்பு உணர்வு பிரசார பயணம் தொடங்கியது. நாளை (5-ம் தேதி) படப்பை அடுத்த வஞ்சுவான்சேரி ஏரியை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. அதன் பிறகு நீர்நிலைகள் பாதுகாப்பு பற்றிய பிரசார பயணம் நடைபெறும்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ