Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மரம் வளர்க்கும் மாணவர்கள்... மலைக்க வைக்கும் அரசுப்பள்ளி! #WhereIsMyGreenWorld

சுற்றுச்சூழல் படிப்படியாக சீர்கெட்டு வருகிறது. இதுபற்றிய விழிப்பு உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். இதற்கு முன் உதாரணமாக மாறிய அரசுப்பள்ளிதான் புதுக்கோட்டை மாவட்டம், மாங்குடி அரசுப்பள்ளி. இப்பள்ளியில்தான் அதிக அளவில் மரங்கள் நடப்பட்டு,அருகிலுள்ள சாலை  வழியே செல்லும் போது, பள்ளி வளாகம் ஒரு வனப்பகுதியை போல பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
 

இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சுமார் 150 மரக்கன்றுகளை நட்டு உள்ளனர். எண்ணிக்கை நடுத்தரமாக இருந்தாலும், அந்தப் பள்ளியின் பரப்பளவை பார்க்கும்போது,  வியப்படையச் செய்கிறது. நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இது ஒரு முன்மாதிரி பள்ளிதான்.
 

இதுகுறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.ஜோதிமணி கூறுகையில், "இந்தப் பள்ளி முழுவதும் சுமார் 150 மரக்கன்றுகள் உள்ளன. இது பார்ப்போர்க்கு ஒரு வனப்பகுதியை போன்று காட்சியளிக்கும். மரக்கன்றுகள் முழுவதும் படர்ந்து ஒரு கூடாரம் போல் அமைந்து, சூரிய ஒளி நேரடியாக தரையில் படாதவாறு உள்ளது. 

நாம் அனைவருமே மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பாதுகாப்பதோடு அல்லாமல்,  சூரிய சக்தியினை பயன்படுத்துதல், விளைநிலங்களை பாதுகாத்தல், உணவுப்பொருட்களை வீணாக்காமல் சாப்பிடுதல், பிளாஸ்டிக் பை பயன்பாட்டை அறவே தவிர்த்தல், இயற்கை வளங்களை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொண்டால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு சுகாதாரமாகவும் வாழலாம்"என்று தெரிவித்தார்.
 

பலரும் மரங்களை தனது பணத்தேவைக்காக பலவகையிலும் அழித்து வரும் நிலையில், நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் அதிக அளவில் மரங்களை நடுவது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது!


- ப.பிரதீபா
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ