Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீனவர்கள் பிரச்னையில் அலட்சிய போக்கை கைவிடுங்கள்! -ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்னையில் அலட்சிய போக்கை கைவிட்டு, சுமூக தீருவு கிடைக்க நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது. மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது ஈவு இரக்கமற்ற செயல்.

தமிழக மீனவர் பிரச்னையில் அலட்சிய போக்கை கைவிட்டு, அவர்களுக்கு சுமுக தீர்வு கிடைத்திட மத்திய அரசு உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், இலங்கை வசம் உள்ள 90 படகுகளை விடுவிக்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என்று அவர் கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ