Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு....வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 4-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கத்திரி வெயில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கத்தை அதிகரித்தது . தற்போது கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழைக்கான காலநிலை உருவாக உள்ளதால், தமிழகத்தில் வெப்பம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பதிவானது. அதிகபட்சமாக தஞ்சாவூரில் 80 மி.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்தபடியாக, கும்பகோணத்தில் 50 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் வேடசந்தூர், தேன்கனிக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஆகிய இடங்களில் 40 மீ.மீ. மழையும் பதிவானது.

“கேரள மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் தென்மேற்கு பருவமழைக்கான காலநிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் குறையலாம். வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது" என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ